சட்டசபையில் நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு-27ம் தேதி சபாநாயகர் தேர்வு
சென்னை: 14வது சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்கின்றனர். சபாநாயகர் தேர்தல் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்து விட்டது. புதிய சட்டசபை உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்காமல் உள்ளனர். இடையில் புதிய சட்டசபைக் கட்டடத்திற்கு மாறியிருந்த சட்டசபை தற்போது மீண்டும் பழைய கட்டடத்திற்கே இடம் பெயர்ந்து வருகிறது.
பழைய சட்டசபை அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகள் படு வேகமாக நடந்து வருகின்றன.
இங்கு நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நாளை முற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏக்களுக்கு் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இதற்கு முன்னதாக இன்றுகாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் செ.கு. தமிழரசனுக்கு ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நாளை எம்.எல்.ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை மண்டபம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
நாளை முதலில் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொள்வார். பதவியேற்பு நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் 27ம் தேதி மீண்டும் சட்டசபை கூடும். அப்போது சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும். ஜூன் 3ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சபையில், ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்துவார். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும்.
இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications