சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி-ராசாவுடன் ஸ்டாலின் சந்திப்பு!

கனிமொழியின் கைது விவகாரம், திமுகவை உலுக்கி எடுத்துவிட்டது. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்ததமுமே இப்போது டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
கனிமொழியை நேற்று அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று சிறையில் சென்று சந்தித்தார். அது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் பலரும் கருணாநிதியுடன் டெல்லியில் உள்ளனர். கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் டெல்லியிலேயே தங்கியுள்ளார்.
இந் நிலையில் கனிமொழி எம்.பியைப் பார்ப்பதற்காக முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி சென்றார். இன்று காலை இந்த வழக்குக்காக பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கனிமொழியை சந்தித்த அவர் சுமார் 40 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களும் உடன் வந்தனர். காலை 10 மணிக்கே நீதிமன்றம் வந்துவிட்ட ஸ்டாலின், கனிமொழிக்காக சுமார் அரை மணி நேரம் காத்திருந்தனர்.
10.30 மணியளவில் அவரை திகார் சிறை போலீசார் நீதிமன்றத்துக்கு அழைதது வந்தனர். அப்போது அவரை ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அதே போல இதே வழக்குக்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவையும் ஸ்டாலின் சந்தித்தார்.
நீதிமன்றத்தில் ராசாவுக்கும், கனிமொழிக்கும் நடுவில் உள்ள இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்திருந்து இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் இன்று மாலை சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications