மீண்டும் இந்தியாவை லஷ்கர் தாக்கினார் தெற்காசியாவில் அமைதி குலையும்-அமெரிக்கா
வாஷிங்டன்: மீண்டும் இந்தியாவை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு தாக்கினால், இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் தெற்காசியாவில் அமைதி சீர்குலையும். லஷ்கர் அமைப்பால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்குமே பெரும் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்று வெளியுறவுக்கான அமெரிக்க செனட் கமிட்டியின் தலைவர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம். இந்த அமைப்பு மீண்டும் இந்தியாவைத் தாக்குமானால் இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் தெற்காசியா முழுவதிலும் அமைதி சீர்குலையும் அபாயம் உள்ளது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்குமே கூட மிகப் பெரிய மிரட்டலாக உருவெடுத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத யுத்தத்தை தூண்டும் வகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூள வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பல தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து வளர்த்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த லஷ்கர் இ தொய்பா என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications