பறவை மோதியதால் அவசரமாக தராயிறங்கிய கிங்பிஷர் விமானம்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: அகமதாபாத்திலிருந்து மும்பைக்குக் கிளம்பிய கிங்பிஷர் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு கிங்பிஷர் பயணிகள் விமானம் ஐடி-3172 மும்பைக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் மீது பறவை மோதியது. இதனால் அந்த விமானம் அவசரமாக அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளை மும்பைக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அனுப்பி வைத்தனர். மீண்டும் பயனிக்க விரும்பாமல் பணத்தை கேட்டவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications