For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: சர்வதேச விசாரணை எதற்கும் இலங்கை ராணுவத்தை உட்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். எனது ராணுவத்தை காப்பேன் என்று இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே கொக்கரித்துள்ளார்.

போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று ஐ.நா. நிபுணர் குழுவால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் ராஜபக்சே சகோதரர்களும், இலங்கை ராணுவமும். இந்த நிலையில், மனித உரிமை மீறல், இன அழிப்பு, போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் சர்வதேச விசாரணைக்குள்ளாகும் சூழல் வேகமாக நெருங்கி வருகிறது.

இந்த நிலையில், ராணுவத்தை எப்பாடுபட்டாவது காப்பேன் என்று உறுமியுள்ளார் ராஜபக்சே.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதன் 2வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோதுதான் இப்படிப் பேசினார் ராஜபக்சே.

அவர் கூறுகையில், நாங்கள் உங்களுக்குத் துரோகம் இழைக்க மாட்டோம். எந்தவிதமான சர்வதேச விசாரணைக்கும் உங்களை உட்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

நமது படையினர் ஒரு கையில் ஆயுதங்களையும், மறுகையில், போரின்போது கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமை நியதிகளையும் தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் போரிட்டனர்.

நமது ராணுவ நடவடிக்கையின் மனிதாபிமானத்தை நான் பாராட்டுகிறேன்.

எந்தவித சர்வதேச நெருக்கடிக்கும் நாங்கள் ஆட்பட மாட்டோம். எங்களது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள முடியும் என்றார் தமிழர்களுக்கு இன்னும் உரிய மறுவாழ்வைக் கொடுக்க முடியாத ராஜபக்சே.

English summary
Mahinda Rajapaksa today vowed to protect the country's military from possible international scrutiny over allegations of human rights violations during its prolonged conflict to end ethnic violence. "We will not betray you", Rajapaksa told his troops during a ceremonial parade to mark the second anniversary of the war victory over the LTTE. "Our forces carried firearms in one hand and a human rights charter in the other during the war", the President said adding, "We are proud of the humaness of our military campaign". He said, Sri Lanka will not give into any pressure from overseas as it is capable of solving its own problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X