கோவையில் திருமண மண்டபத்தில் 70 பவுன் நகைகள் திருட்டு
கோவை: கோவையில் தொழிலதிபர் இல்ல திருமண நிகழ்ச்சியில் 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
திருமணவிழா
கோவை சாயிபாபா காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகிரிசாமி. இவரது மகன் மஞ்சுநாத்தின் திருமணவிழா ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தது. இதனையொட்டி, வியாழக்கிழமை அன்று மாப்பிள்ளை அழைப்பு வைபம் நடந்துகொண்டிருந்தது. இருவீட்டார் சார்பிலும் ஏராளமான விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
மணமகன் அறையில் மாயமான நகைகள்
மணமகன் அறையில் உள்ள பீரோவில் மணமகனின் தாயார் மற்றும் சித்தியின் நகைகள் வைக்கப்பட்டிருந்தன. மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு முடிந்து மணமகன் அறைக்கு திரும்பி வந்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த வளையல்கள், நெக்லஸ், மோதிரம் என 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
போலீசில் புகார்
இதனையடுத்து அழகிரிசாமி ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டு நடந்த இடத்தை போலீசார் பார்வையிட்டனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் சிங்காநல்லூரில் ஒரு திருமண மண்டபத்தில் 16 சவரன் நகை கொள்ளை போனது. கோவையின் பல்வேறு பகுதிகளிலும் தங்க நகைகளை குறிவைத்து பல திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கொள்ளை கும்பலின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் மாநகர காவல் தடுமாறுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications