ஹஸன் அலியுடன் நெருக்கமாக இருந்த ஜெயப்ரதா, அமர்சிங்!
டெல்லி: பல்லாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பண பதுக்கல் செய்து கைது செய்யப்பட்ட ஹஸன் அலிக்கும் அரசியல்வாதிகள் அமர்சிங், ஜெயப்பிரதா, ரேணுகா சவுத்ரி உள்ளிட்டோருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கொல்கத்தா வர்த்தகரும் ஹஸன் அலியின் கூட்டாளியுமான காஷிநாத் தபூரியா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஹஸன் அலிக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளார் தபூரியா.
அவர் கூறுகையில், "ஹஸன் அலிக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. காமன்வெல்த் ஊழலில் சிறை சென்றுள்ள சுரேஷ் கல்மாடி, முன்னாள் அமைச்சர் சுரேஷ் கல்மாடி, சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்பி ஜெயப்ரதா, காங்கிரஸ் எம்பி சுப்பராமிரெட்டி, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார் ஹஸன் அலி," என்று கூறியுள்ளார்.
வருமான வரித் துறையின் நெருக்கடி ஆரம்பமான போது, கலவைப்பட வேண்டாம். காங்கிரஸில் எனக்கு நெருங்கிய தொடர்புள்ளது. அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம், என்று தபூரியாவிடம் சொன்னாராம் ஹஸன் அலி.
தபூரியாவின் இந்த வாக்குமூலத்தை, ஹஸன் அலிக்கு எதிரான தங்களின் 1000 பக்க குற்றப்பத்திரிகையின் ஒரு அங்கமாக இணைத்துள்ளது சிபிஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications