போதையில் பாட்டியை உயிரோடு எரித்துக் கொன்ற பேரன் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் மனைவியுடன் சண்டை போட்ட பேரனை தட்டிக் கேட்ட பாட்டி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகர் அருகில் கந்தவேல் மகன் பாதாள முத்துகுமார் வசித்து வருகிறார். இவர் மினி பஸ்சில் கண்டரக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கந்தம்மாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தான் அவரது பாட்டி பாதாள முத்தம்மாள் தனியாக வசித்து வந்தார். தினமும் வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வரும் முத்துகுமார் குடித்து வி்ட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவது வழக்கம். அப்போது முத்தமாள் வந்து பேரனை கண்டிப்பதுண்டு. நேற்று முன்தினம் வழக்கம்போல் முத்துகுமார் வேலை முடிந்து வீ்ட்டிற்கு வந்தபோது குடித்து விட்டு வந்து மனைவி கந்தமாளிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். கந்தம்மாள் பணம் தர மறுத்ததும் ஆத்திரமடைந்த முத்துகுமார் மனைவியை அடித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கந்தம்மாள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார். இது தெரிந்து பாட்டி முத்தம்மாள் பேரன் வீ்ட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளார். அப்போது நேரம் நள்ளிரவு 12.15 மணி. பாட்டி திட்டியதால் முத்துகுமார் ஆத்திரத்தில் ஓங்கி அடித்துள்ளார். இதில் முத்தம்மாள் கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து முத்துகுமார் பாட்டி முத்தம்மாள் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து முத்தம்மாளின் மகன் முத்துபாண்டி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் முத்துகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படு்த்தி சிறையில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications