இன்று தலைமை செயலகத்தில் ஜெ. தலைமையில் 2வது அமைச்சரவை கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று காலை முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.

கடந்த 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் வரும் ஜூன் 6-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது, சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு நடத்த வல்லுனர் குழு அமைப்பது, ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அரசின் கொள்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டம் நடந்து முடிந்த பிறகு அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் அந்தந்த துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து தேர்தல் வாக்குறுதிகள், முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விரைவில் நிறைவேற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான 2வது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் அரசு கேபிள் டிவியை கொண்டு வருவது, மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒரே இடத்தில் நடத்தலாமா அல்லது முன்புபோல் பல்வேறு இடங்களில் நடத்தலாமா, தற்போதுள்ள மின்தடை பிரச்சனையால் ஒரே இடத்தில் நடத்துவது தான் உகந்தது என்று கூறப்படுவதால் அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்வது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+