தென்காசி அருகே ரூ. 43 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 6 பேர் கைது
தென்காசி: தென்காசி அருகே ரூ. 43 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி அருகேயுள்ள கடையநல்லூர் பகுதியில் கள்ள நோட்டு கும்பல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை எஸ்ஐ ஆடிவேல் தலைமையில் ஒரு குழுவினர் கடந்த வாரம் கடையநல்லூரைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை வைத்து முக்கிய நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இக்கும்பலின் தலைவன் ரத்னசாமி என்பவன் பாவூர்சத்திரம் அருகே இருப்பது அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் ரூ. 43 லட்சம் கள்ள நோட்டுகள் கொண்ட சூட்கேட்ஸ் இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்யூட்டர், கலர் பிரிண்டர், கலர்ஜெராக்ஸ் உளளிட்ட இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி நேரில் பார்வையிட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications