ஹெல்மெட் அணிய சொல்வதா?!-இந்தூரில் வியாபாரிகள் கடையடைப்பு

இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என இந்தூர் மாநகர நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டனர். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த உத்தரவை வாபஸ் வாங்க வலியுறுத்தி ராஜீவ் விகாஸ் கேந்திரா என்ற அமைப்பு நேற்று காலை 7 மணிமுதல் 12 மணிவரை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.
இதனால், இந்தூர் நகரில் சில மணி நேரம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம், ஜவஹர் மார்க், டோரி கார்னர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மதியம் 12 மணிக்கு பின் கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. சென்னை, போபால் உள்ளிட்ட நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications