நிம்மதியாக ஆட்சி நடத்த விடுங்கப்பா: எதிர்கட்சிகளுக்கு எதியூரப்பா வேண்டுகோள்

எதியூரப்பா அரசு பதவியேற்று நேற்றுடன் (30-5-2011) 3 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,
அனுபசாலிகள், மூத்த தலைவர்களின் வழிக்காட்டுத்ல்படி ஆட்சி நடத்துகிறேன். நீர்ப்பாசனம், சிறுதொழில், கிராம அபிவிருத்தி, நிதி நிர்வாகம், கல்வி என்று அனைத்து துறைகளிலும் என்னால் இயன்ற திட்டங்களை அமல்படுத்தியுள்ளேன். இதையெல்லாம் சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
எதிர்கட்சி மட்டும் இடையூறு செய்யாமல் இருந்தால் இன்னும் பல துறைகளில் கர்நாடகம் முதலிடத்தைப் பிடித்திருக்கும். தொந்தரவுகளுக்கிடையிலும் நமது மாநிலம் அபிவிருத்தி பணிகளில் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
நலத்திட்டங்கள் நிறைந்த கர்நாடகம் என்ற அடைமொழியுடன் நமது மாநிலம் அழைக்கப்பட வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக கடந்த 3 ஆண்டுளாக பாடுபட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளேன்.
நான் இன்னும் 2 ஆண்டுகள் முதல்வராக இருக்கும் பட்சத்தில் கிராமப்புறங்களுக்கு கூடுதல் நிதி வசதி, விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பது எனது குறிக்கோள் ஆகும்.
யாருமே செய்யாத செயல்களை எல்லாம் நான் மட்டும் தான் செய்துள்ளேன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பவில்லை. மீதமுள்ள 2 ஆண்டுகளில் கர்நாடக மக்களுக்கு மேலும் பல நல்ல சேவைகள் செய்ய விரும்புகிறேன். எனது மந்திரிசபை சகாக்களுடன் சேர்ந்து சேவை செய்வேன்.
இதற்கு எதிர்கட்சிகள் ஒன்றே ஒன்றை மட்டும் செய்தால் போதும். என்னை நிம்மதியாக ஆட்சி நடத்த விட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து எதிர்கட்சிகள் என்னுடன் விவாதித்திருக்கிறார்களா? விவாதிக்கவே விடவில்லை. இனி அத்தகைய சூழல் இருக்கக் கூடாது. எதிர்கட்சிகள் என்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால், மீதமுள்ள 2 ஆண்டுகளில் மக்கள் பணியை சீரும், சிறப்புமாய் செய்ய என்னால் முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications