புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தியாகராஜன் நியமனம்
புதுச்சேரி: இன்னும் ஒரு அமைச்சர் கூட பதவியேற்காமல் உள்ள புதுச்சேரியில், தற்காலிக சபாநாயகராக தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்துடன் சேர்த்து புதுவைக்கும் தேர்தல் நடந்தது. அதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 20 தொகுதிகளை இக்கூட்டணி வென்றது.
இதையடுத்து என்.ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் இன்னும் அமைச்சரவை பதவியேற்கவில்லை. ஒரு அமைச்சர் கூட நியமிக்கப்படாமல் உள்ளது. என்.ஆர். காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும் இடையே வெடித்துள்ள பூசல் காரணமாக அமைச்சரவையை நியமிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் ரங்கசாமி.
இந்த நிலையில் தற்போது தற்காலிக சபாநாயகராக டி.தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு நாளை இக்பால் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டப்பட்டு பிற உறுப்பினர்களுக்கு தியாகராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன் பின்னர் ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டம் நடைபெறும்.
இந்த நிலையில் எப்போது அமைச்சரவை அமையும் என்பது தொடர்ந்து பெரும் மர்மமாக உள்ளது. இதுகுறித்து ரங்கசாமி தரப்பில் எந்த செய்தியும் காணவில்லை.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications