இளம்பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் இளம்பெண் ஒருவருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அம்மாப்பேட்டை பங்களா தெருவைச் சேர்ந்தவர் வனிதா ( 22). இவரது செல்போனுக்கு அடிக்கடி மர்ம நபர் ஒருவர் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளார்.
இது போன்ற ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பக் கூடாது என அந்த நபரை வனிதா எச்சரித்துள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் தொடர்ந்து அந்ந நபர் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளார்.
இது பற்றி வனிதா அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலயைத்தில் புகார் செய்தனர்.
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த சூரிய நாராயணன்( 23), வாசன் ( 28) ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications