மதுரைக்கு மீண்டும் வந்தார் 'வீரப்பன்' புகழ் வெள்ளைத்துரை-பீதியில் ரவுடிகள்
மதுரை: சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்தி பெரும் பெயர் பெற்ற வெள்ளைத்துரை மீண்டும் மதுரையில் உதவி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் மதுரை மாநகரில் உலவி வரும் ரவுடிக் கும்பல்கள் பெரும் பீதியில் மூழ்கியுள்ளன.
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படை குழுவில் இடம் பெற்றிருந்தவர் வெள்ளைத்துரை. இவர்தான் வீரப்பனை சுட்டுக் கொன்றவர். இதன் மூலம் இவருக்கு இரட்டை பதவி உயர்வை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கினார். இதன் மூலம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த வெள்ளைத்துரை, டி.எஸ்.பி. ஆனார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இவர் மதுரையில் உதவி ஆணையாளராக பதவி வகித்து வந்தார். திமுக ஆட்சியில் இவரை டம்மி பதவியில் அமர்த்தி விட்டனர்.
இந்த நிலையில் மறுபடியும் வெள்ளைத்துரை லைம்லைட்டுக்கு வந்துள்ளார். மதுரையில் அண்ணா நகர் சரக உதவி ஆணையாளராக வெள்ளைத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் ரவுடிகளை ஒழிப்பதுதான் எங்களது முதல் வேலை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையி்ல ரவுடிகளை என்கவுண்டர் செய்வதில் பிரபலமான வெள்ளைத்துரை மதுரைக்கு வந்திருப்பதால் ரவுடிகள் பீதியைடந்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் மதுரையில் ரவுடிகள் வேட்டை தொடங்கும் என்றும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோர் வேட்டையாடப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பன் வேட்டையில் மட்டுமல்லாமல், சென்னையைக் கலக்கி வந்த அயோத்தியா குப்பம் வீரமணியையும் நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி என்கவுண்டர் செய்தவர் வெள்ளைத்துரை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications