சேலம் சிறையில் ஆணுறுப்பை அறுத்து கைதி தற்கொலை முயற்சி
சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதி ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மத்திய சிறையில், 800 க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஓராண்டுக்கு முன்பு கொலை வழக்கு ஒன்றில் சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த கந்தசாமி (31) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை சிறையில் அடைத்த நாள் முதல் மனநலம் பாதித்த நிலையிலே காணப்பட்டார் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், சிறையில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர் தனது அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், அவரது அலறல் சத்தம் கேட்டு, சிறைக்காவலர்கள் கழிவறைக்கு சென்று பார்த்த போது, அந்தரங்க உறுப்பு பாதி துண்டான நிலையில், கந்தசாமி அலறி துடித்தார்.
உடனே, சிறைக் காவலர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications