கோட்டையில் திடீர் தீ- நீண்ட நேரமாக எரிந்த குப்பைக் குவியல்
சென்னை: புனித ஜார்ஜ் கோட்டைக்குப் பின்புறம் உள்ள குப்பைக் குவியலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பல மணி நேரம் தீ எரிந்தது. அதில் என்ன எரிந்தது என்பது தெரியவில்லை.
புதிய சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தினார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும் நடந்தது.
இந்த நிலையில், பிற்பகல் வாக்கில் நாமக்கல் கவிஞர் மாளிகையான 10 மாடிக் கட்டடத்தின் பின்புறம் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு பல மணி நேரம் அது எரிந்தது.
இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாகப் போராடினர். இருந்தாலும் முடியவில்லை. தொடர்ந்து தீ பல மணி நேரத்திற்கு எரிந்து கொண்டிருந்தது.
இந்தக் குப்பைக் குவியலில் ஆயிரக்கணக்கான மது பாட்டில்களும் கிடந்ததாக தெரிகிறது. பாட்டில்கள் சூடு தாங்காமல் வெடித்துச் சிதறி எரிந்ததால் பரபரப்பும் காணப்பட்டது.
யாராவது சிகரெட் புகைத்து விட்டு இந்த குப்பையில் சிகரெட்டை அணைக்காமல் தூக்கிப் போட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications