ஊழியர்கள் மீது தாக்குதல்-இலங்கைக்கு ஜெர்மனி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கொழும்பு கடுநாயகே ஏற்றுமதி வர்த்தகப் பகுதியில் ஜெர்மன் நிறுவன ஊழியர்கள் மீது போலீஸார் மிக பயங்கர தாக்குதல் நடத்தியதற்கு ஜெர்மன் தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தகப் பகுதியில் பல ஜெர்மன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந் நிலையில் சமீபத்தில் இந்தப் பகுதிக்குள் நுழைந்த போலீஸ் அதிரடிப்படையினர் சோதனை என்ற பெயரில் ஜெர்மன் ஊழியர்களை கேவலமாக நடத்தினர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள பணியில் இருந்த ஊழியர்களை போலீசார் மிக பயங்கரமாகத் தாக்கினர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

இதை இலங்கைக்கான ஜெர்மன் தூதர் ஜீன்ஸ் பிளாட்னர் கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோதபய ராஜபக்சேவுக்கு கண்டன கடிதமும் எழுதியுள்ளார்.

இதையடுத்து தவறு நடந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள இலங்கை காவல்துறை, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+