சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவியுங்கள்-ஜெயலலிதாவுக்கு சீமான் கோரிக்கை
மதுரை: தமிழகத்தில், சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் உள்ள சிறைகளில் உள்ள ஈழ தமிழர்களை பல ஆண்டுகளாக சிறை வைத்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு தமிழக முதல்வர் உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் முகாம்கள் குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
புதிதாகப் பொறுப்பேற்று உள்ள அரசு தாக்கல் செய்துள்ள ஆளுநர் உரையில் நம்பிக்கையளிப்பதும் புதியதுமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து கால் நூற்றாண்டிற்கும் மேலாக இங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழர்கள், தமிழகத்திலேயே கெளரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சீரமைக்கப்படும் என்றும், தரமான இருப்பிடம், குடிநீர் வசதி, சுகாதாரம், மருத்துவ வசதி ஆகியன செய்து தரப்படும் என்றும் ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
இதுமட்டுமின்றி, தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருப்பதையும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறி வரவேற்கிறது.
முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மாதா மாதம் அரசு அளித்துவரும் உதவித் தொகை மிகவும் குறைவாகும். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அந்த உதவித்தொகை போதுமானதல்ல. எனவே அத்தொகையை பன்மடங்கு உயர்த்தி அளிக்க வேண்டும் .
தமிழகத்தில், சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் உள்ள சிறைகளில் ஐயத்தின் பேரில் பல ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறைபடுத்தி வைத்திருக்கின்றனர். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. இவர்களில் சிலரை நீதிமன்றம் விடுதலை கூட செய்துவிட்டது. அப்படியிருந்தும் எந்த சட்ட ரீதியான அடிப்படையும் இன்றி, அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த அத்துமீறலுக்கு தமிழக முதல்வர் உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுதலை செய்து, அவர்கள் தங்கள் உறவினர்களுடன் சென்று வாழ அனுமதிக்க வேண்டும் . சட்டத்திற்குப் புறம்பான அந்த சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications