ஆளுநர் உரைக்கு காங். தலைவர் தங்கபாலு அதிரடி வரவேற்பு
சென்னை: சட்டசபையில் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா நேற்று நிகழ்த்திய உரைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஆளுநர் உரையில், மத்திய அரசோடு தமிழக அரசு சுமூகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள கருத்து பெரிதும் வரவேற்கத்தக்கது.
ஆட்சி மாற்றம் ஏற்படும் போது கட்சி என்ற நிலைப்பாட்டை அணுகாமல் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் திட்டங்கள் தங்கு தடையின்றி நிறைவடையும். மாநிலத்தின் சீரிய வளர்ச்சிக்கு அது உதவும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மத்தியில் தமிழ்மொழி ஆட்சிமொழி ஆவதற்கும் நீதிமன்றங்களில் வழக்காடும் மொழி ஆவதற்கும் ஆவண செய்யப்படும் என்று கவர்னர் உரையில் குறிப்பிட்டிருப்பதை வரவேற்கிறேன். இதற்கு தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்று தங்கபாலு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications