திருப்பதியில் சிறுமி பலாத்காரம்-தேவஸ்தான ஊழியர் கைது
திருப்பதி: திருப்பதியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த திருமலை தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பெஸ்டவாரி பேட்டையை சேர்ந்த சிறுமி அனிதா (வயது 14-பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது தாயுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பஸ் திருப்பதி சென்றார்.
திருமலையில் பக்தர்கள் தகவல் மையம் அருகே தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியிடம் தேவஸ்தான பாதுகாவலர் டில்லி பாபு (50) பேச்சு கொடுத்தார். சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் பாதுகாப்பு அலுவலகம் பின்புறம் உள்ள ஓய்வு அறைக்கு வந்து தூங்குமாறு கூறி அழைத்துச் சென்று சிறுமியை கற்பழித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிய சிறுமி வெளியே அலறிக் கொண்டு ஓடி வரவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சிறுமியிடம் விசாரித்தார்.
சிறுமி தந்த தகவலால் அதிர்ந்த அவர் உடனே அவளை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று வழக்குப் பதிவு செய்து, டில்லிபாபுவை கைது செய்தார். இதையடுத்து டில்லிபாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோரை வரவழைத்து அவள் ஒப்படைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications