சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் தர சிபிஐ கோர்ட் மறுப்பு
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் அளிக்க டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட் மறுத்து விட்டது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்தவர் சுரேஷ் கல்மாடி. காங்கிரஸ்காரரான இவர் பெரும் ஊழலில் ஈடுபட்டு நாட்டையே தலைக்குனிவுக்குள்ளாக்கி விட்டார். இவரும், இவரது கூட்டாளிகளும் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டை அணுகினார் கல்மாடி. அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தல்வந்த் சிங், கல்மாடியின் ஜாமீன் மனுவைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அவர் மட்டுமல்லாது, போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இயக்குநர் ஜெனரல் ஏ.எஸ்.வி.பிரசாத்தின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். மிகப் பெரிய குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்பதால் ஜாமீன் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
பிரசாத் கல்மாடிக்கு மிகவும் நெருங்கியவர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் வெளியில் விட்டால் சாட்சியங்களைக் கலைத்து விடுவார்கள் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications