சென்னையில் பயங்கரம்-காதல் மணம் புரிந்த சாப்ட்வேர் என்ஜீனியர் எரித்துக் கொலை
சென்னை: சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் எரித்துக் கொல்லப்பட்டார். அவரை கடத்திச் சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் பெரம்பலூரைச் சேர்ந்தவரான சரண்யா என்பவரை காதலித்து மணம் புரிந்தார். சரண்யா, சென்னையில் எம்.பி.பி.எஸ், இறுதியாண்டு படித்து வருகிறார்.
ஜூன் 2ம் தேதி பார்த்தசாரதி வழக்கம் போல வேலைக்குச் சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய மனைவி சரண்யா சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், ஜூன் 4ம் தேதி திண்டிவனம் அருகே எரிந்த நிலையி்ல் ஒரு உடல் கைப்பற்றப்பட்டது. அதை அடையாளம் காட்ட சரண்யா அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அது தனது கணவரின் உடல்தான் என்று சரண்யா அடையாளம் காட்டினார்.
இதையடுத்து போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்த்தசாரதியை கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
தனது காதல் திருமணத்திற்கு தனது குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார் சரண்யா. மேலும் தனது கணவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும், முனவிரோதமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications