இலவசங்களை வழங்கிய பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக முடிவு?
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அறிவித்த இலவசங்களை வழங்கிய பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான இலவச கிரைண்டர், பேன், மிக்சி, மாணவர்களுக்கு லேப்டாப் ஆகிய திட்டங்களை ஆளுநர் உரையில் அறிவித்து வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் இலவச அரிசி, திருமணத்துக்கு ரூ. 25 ஆயிரத்துடன் தாலிக்கு தங்கம், 23 லட்சம் முதியோர், மாற்று திறனாளிகள் பயன்பெறும் வண்ணம் மாத உதவித் தொகை ரூ.1000 போன்ற திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியது.
மேலும் வரும் அக்டோபர் மாதம் 20-ம தேதியுடன் உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் ஆகஸ்ட் மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது இலவச திட்டங்கள் வழங்கப்பட வேண்டிய நிலை உள்ளதால் தேர்தல் ஜனவரி மாதம் வரை தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ள இலவச பொருட்கள் உள்ளாட்சி உறுப்பினர்களை கொண்டு வழங்காமல் அந்தந்த நகர, ஒன்றிய, கிளை கழக அதிமுக நகரச் செயலாளர்கள் மேற்பார்வையில் வார்டு செயலாளர்கள் மூலம் வழங்கவும் கட்சி தலைமை ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அப்படி கட்சிகாரர்களை கொண்டு இலவச பொருட்கள் வழங்கும்போது அதி்முக கூட்டணி மொத்த உள்ளாட்சி பதவிகளையும் கைப்பற்ற முடியும் என்பதால் இத்திட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளாட்சியில் பணநாயகத்தை எதிர்கட்சிகள் கட்டவிழ்த்து விடக்கூடும். இதை எல்லாம் சமாளிக்க வேண்டுமானால் இலவச திட்டங்களை வாக்காளர்களின் கரங்களுக்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சி தேர்தலை முழு பலத்தோடு சந்திக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், இதே நி்லை நாடாளுமன்ற தேர்தல் வரை வாக்காளர்களை திசை மாறவிடாமல் தடுக்கும் என்பதும் அதிமுக தலைமையின் திட்டம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
மொத்தத்தில் அதிமுக அரசின் திட்டங்கள் எளிதாக மக்களை சென்றடையும் வண்ணம் அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications