பாகிஸ்தானில் நடந்த பயங்கர மோதலில் 8 ராணுவத்தினர், 12 தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத்: தெற்கு வஜீரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் நடந்த மோதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தெற்கு வஜீரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை தாலிபான் ஆதரவுக் கும்பல் தாக்கியது. அவர்கள் அதிநவீன கருவிகளையும், ராக்கெட்களையும் வைத்து தாக்கினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தினரின் தாக்குதலில், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சுமார் 100 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் தான் தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப் போவதாக தீவிரவாதிகள் ஏற்கனவே சூளுரை எடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications