இரு வாரங்களுக்குள் தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து! - ஜி.கே.வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி - கொழும்பு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜி கே வாசன் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதல்முதலாக சென்னையைச் சேர்ந்த அமெட் ஷிப்பிங் நிறுவனம் உல்லாச கப்பல் (எம்.வி. அமெட் மெஜஸ்டி) சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. 9 மாடிகளுடன் 267 சொகுசு அறைகள், நவீன ரெஸ்டாரன்ட் நீச்சல் குளம், மாநாட்டு அரங்கம், கேளிக்கை அரங்கம், பிiட்டி பார்லர், மசாஜ் கிளப் என பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த சொகுசு உல்லாச கப்பலில் 1,400 பேர் பயணம் செய்யலாம். இந்திய உணவு வகைகள் மட்டுமின்றி சைனீஷ், தந்தூரி உள்பட வெளிநாட்டு உணவு பதார்த்தங்களையும் இந்த கப்பலில் கிடைக்கும்.

இந்திய மாலுமிகள் சிறந்தவர்கள்

உல்லாச கப்பல் தொடக்கவிழா சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கப்பலின் உள்ளே நேற்று மாலை நடைபெற்றது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கொடியசைத்து கப்பலை தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், "உலக வர்த்தகத்தில் 90 சதவீத சரக்கு போக்குவரத்து கடல்வழியாகவே நடக்கின்றன. எனவே, பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இதை உணர்ந்துதான் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கப்பல் போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லி உள்ளனர்.

உலக அளவில் மாலுமிகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 6 முதல் 7 சதவீதமாக உள்ளது. பணியை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள், கடின உழைப்பாளிகள் என்று உலக அளவில் இந்திய மாலுமிகளுக்கு நல்ல பெயர் உள்ளது.

வரும் காலத்தில் மாலுமிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருப்பதால் தரமான பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள்

உல்லாச கப்பல் போக்குவரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் சென்னை துறைமுகத்தில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் முதல் உல்லாச கப்பல் சேவை தொடக்கவிழா இங்கு நடப்பது பொருத்தமான ஒன்று. சென்னையைத் தொடர்ந்து, கோவா, மும்பை, கொச்சி, மங்களூர் துறைமுகங்களிலும் உல்லாச கப்பல் போக்குவரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்," என்றார்.

விழா முடிந்த பிறகு அமைச்சர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட நெடுங்கால கோரிக்கை. இதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. இன்னும் 10 அல்லது 15 நாளில் தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+