திருப்பூரில் கன ஜோராக லாட்டரி விற்பனை: கண்டுகொள்ளுமா காவல் துறை?
திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கன ஜோராக நடைபெற்று வருகிறது.
தடை
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் எவ்வித இடைஞ்சலும் இன்றி படுஜோராக லாட்டரிகள் விற்பனையாகிறது. கேரளாவிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். சாமுண்டிபுரம், வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், பூலுவப்பட்டி, போயம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் மறைமுகமாக வைத்து விற்பனை செய்கின்றனர்.
சம்பாத்தியத்தை இழக்கும் தொழிலாளிகள்
இந்த லாட்டரி வியாபாரிகளின் குறி பெரும்பாலும் பனியன் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்தாம். வேலை முடிந்து வரும் தொழிலாளர்களை வாசலிலேயே சந்தித்து விற்பனை செய்கின்றனர் சிலர். அவற்றை கலாசு தொழிலாளர்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை, லாட்டரி வாங்குவதில் தொழிலாளர்கள் தொலைத்து விடுகின்றனர்.
கண்டுகொள்ளாத காவல்துறை
இந்தப் பகுதிகளில் தினமும் பல லட்சம் ரூபாய்களுக்கு லாட்டரி விற்பனை செய்யப்படு வருகிறது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை போலீசாருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், அவர்கள் இதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். புதிய எஸ்.பி. பாலகிருஷ்ணன் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம்.












Click it and Unblock the Notifications