அமெரிக்காவை அழிப்போம்-ஜவாஹிரி கொக்கரிப்பு!

இவர் பின்லேடன் உயிருடன் இருந்தபோதே அவருக்கு எதிராக செயல்பட்டவராக வர்ணிக்கப்பட்டவர். நீண்ட காலத்திற்கு முன்பே இவர் பின்லேடனை விட்டுப் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறின. இவர் என்ன ஆனார் என்பதும் மர்மமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இவர் உயிருடன் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஒரு வீடியோ மூலம் தனது பேச்சை வெளியிட்டுள்ளார் ஜவாஹிரி. 28 நிமிடம் அந்த வீடியோவில் பேசியுள்ளார் ஜவாஹிரி.
வெள்ளை நிறத் தலைப்பாகையுடன், முதுகுக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்ட துப்பாக்கியின் பின்னணியில் பேசினார் ஜவாஹிரி.
வீடியோவில் ஜவாஹிரி கூறுகையில், இன்று, கடவுளின் அருளால், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு தனி மனிதரோ அல்லது குழுவோ அல்லது பிரிவோ எதிரியாக இல்லை. மாறாக ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகும் இன்று அமெரிக்காவுக்கு எதிரியாக மாறியுள்ளது. மிகப் பெரிய புரட்சியை அமெரிக்கா சந்தித்துக் கொண்டுள்ளது. ஜிஹாத் விஸ்வரூபத்தை எட்டியுள்ளது.
ஒசாமா பின்லேடன் இன்று ஒரு தியாகியாக கடவுளை அடைந்துள்ளார். அமெரிக்க மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கி பெருமைக்குரியவர் பின்லேடன். உயிருடன் இருந்தபோதும் சரி, மரணத்திற்குப் பின்னரும் சரி, அவர் அமெரிக்க மக்களை பீதிக்குள்ளாக்கிபடிதான் உள்ளார்.
டுனிஷியா, எகிப்து, லிபியா, ஏமன், சிரியா நாடுகளில் நடந்ததைப் பார்த்திருப்பீர்கள். அதேபோன்ற நிலை விரைவில் அமெரிக்காவுக்கும் வரும். சர்வதேச முஸ்லீ்ம் சமுதாயம் ஒருங்கிணைந்து அமெரிக்காவை அழித்தொழிக்கும்.
அனைத்து இடங்களிலும் எங்களது சகோதரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எங்களது கரங்கள் உங்களை நோக்கி, உங்களது இதயங்களை நோக்கி நீண்டு வருகிறது. எனவே அனைவரும் இணைந்து செயல்பட்டு அல்லாவின் உலகத்தை நிலை நிறுத்துவோம்.
பின்லேடனின் கொல்லப்பட்ட பின்னர் அவரது புகைப்படங்களை வெளியிட அமெரிக்கா பயப்படுகிறது. காரணம், இஸ்லாமிய மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடுமே என்றஅச்சம்தான் அதற்குக் காரணம். நாம் செய்ய நினைத்ததை பின்லேடன் சாதித்து விட்டார். அவரது செய்தி அனைவரையும் வந்து சேர்ந்துள்ளது.
பின்லேடனின் மரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், அரசியல்வாதிகளும் முக்கியக் காரணமாவர். இந்த துரோகிகளுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் பொங்கி எழ வேண்டும். ஊழல் கரை படிந்த பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு எதிராக கொதித்து எழ வேண்டும். அமெரிக்காவின் அடிமை நாடாக மாறியுள்ள பாகிஸ்தானை மீட்க வேண்டும். அல்லது அவர்கள் உங்களைக் கொன்று அழித்து விடுவார்கள் என்றார் ஜவாஹிரி.
ஜவாஹிரியின் இந்த செய்தி குறித்து அமெரிக்கா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications