இன்போசிஸ் மீது பி1 விசா மோசடிப் புகார்-நாராயணமூர்த்தி வருத்தம்

பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனத்தின் 30வது வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு நாராயணமூர்த்தி பேசினார். இதுதான் அவர் இன்போசிஸ் தலைவராக கலந்து கொள்ளும் கடைசிக் கூட்டம் என்பதால் அவரது பேச்சு உருக்கமாக இருந்தது.
நாராயணமூர்த்தி பேசுகையில், இன்போசிஸ் போர்டை விட்டு நான் விலகும் இந்த நேரத்தில், இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட் பி1 விசா மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது வருத்தம் தருகிறது, வேதனை தருகிறது. இந்த விஷயத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்போசிஸ் மீதான களங்கம் துடைக்கப்படும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
கடந்த மே மாதம் அமெரிக்க கோர்ட் ஒன்று இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில், பி1 வர்த்தக விசாவைப் பெற்றது தொடர்பான ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்குமாறு அது உத்தரவிட்டிருந்தது.
இன்போசிஸ் நிறுவன முன்னாள் ஊழியர் ஜேக் பால்மர் என்பவர் இதுதொடர்பான வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
நாராயணமூர்த்தி தொடர்ந்து பேசுகையில், எனது கடைசி உரையை நிகழ்த்துவது எனக்கு எளிதாக இல்லை. கடந்த கால நினைவுகள் எனது மனதில் நிழலாடுகிறது.
இன்போசிஸ் தனது 30வது ஆண்டில் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. புதிய வாய்ப்புகளில் இன்போசிஸ் புக வேண்டிய நேரம் இது.
ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், எனது வாழ்க்கை நல்ல நம்பிக்கையூட்டும் பாடமாக அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வரும் ஆண்டுகளில் நமது வாடிக்கையாளர், பணியாளர், முதலீட்டாளர் உறவு மேலும் வலுப்பட வேண்டும். ஒரு டெக்னாலஜி நிறுவனமாக உருவெடுத்து இன்று வர்த்தக தீர்வுக்கான நிறுவனமாக இந்போசிஸ் மாறியிருக்கிறது என்றார் அவர்.
ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நாராயணமூ்ர்த்தி இன்போசிஸ் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1981ம் ஆண்டு வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் நாராயணமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து இன்போசிஸ் சாம்ராஜ்யத்தை எளிய முறையில் தொடங்கினர். இன்று இந்தியாவின் 2வது மிகப் பெரிய ஐடி நிறுவனமாக இன்போசிஸ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இன்று உலகெங்கும் 1.3 லட்சம் ஊழியர்களுடன், 6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கூடியதாக இன்போசிஸ் கிளை பரப்பி நிற்கிறது. நாஸ்டாக்கிலும் இது பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கே.வி.காமத் நியமிக்கப்பட்டார். நாராயணமூர்த்திக்குப் பிறகு காமத்தான் இன்போசிஸை வழி நடத்திச் செல்லப் போகிறார்.
புதிய தலைமைச் செயலதிகாரியாக ஷிபுலால் நியமிக்கப்பட்டுள்ளார். இணைத் தலைவராக எஸ்.கோபாலகிருஷ்ணன் செயல்படுவார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications