குற்றவாளிகள் பிடிபடாத பத்திரிக்கையாளர்கள் கொலை வழக்குகள்-7வது இடத்தில் இந்தியா!
டெல்லி: பத்திரிக்கையாளர்கள் கொலைச் சம்பவங்களில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
மும்பையில் மிட் டே பத்திரிக்கையின் கிரைம் நிருபர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் இந்திய பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கலப்பபட பெட்ரோல், மண்ணெண்ணய் மாபியா கும்பல்தான் இந்த கொலைக்குப் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கும்பலுக்கு இதுவரை எத்தனையோ உயிர்கள் பறி போயுள்ளன. ஆனால் மகாராஷ்டிர அரசு இதுவரை இந்தக் கும்பலின் அட்டகாசத்தையும், கொலை வெறியாட்டத்தையும் ஒடுக்க உருப்படியான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் உலகில் அதிக அளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் சம்பவங்களில், குற்றவாளிகள் பிடிபடாத வழக்குகளில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.
2011ல் உலக அளவில் தீர்வு காணப்படாத பத்திரிக்கையாளர் கொலைச் சம்பவங்களில் இந்தியா 7வது இடத்தில் இருப்பதாக சர்வதேச மீடியா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தீர்வு காணப்படாத பத்திரிக்கையாளர் கொலைச் சம்பவங்களைக் கொண்டுள்ள 13 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
2001 ஜனவரி 1 முதல் 2010 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் நடந்த கொலைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் ஏழு பத்திரிக்கையாளர் கொலைச் சம்பவங்களில் இதுவரை துப்பு துலங்கவில்லை என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
உலக அளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் நிகழ்வுகளில் 70 சதவீதம் பணியில் ஈடுபட்டிருக்கும்போது நடந்த கொலைகள் என்றும் அத்தகவல் தெரிவிக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications