கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு-நாளை அறிவிக்கிறது சுப்ரீம் கோர்ட்
Subscribe to Oneindia Tamil

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன. இதையடுத்து இருவரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
உச்சநீதிமன்ற விடுமுறைக் கால பெஞ்ச் இந்த மனுக்கள் மீ்து நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை தீர்ப்பை அறிவிக்கும்.
இவர்களது வழக்கு 16வது வழக்காக நாளைய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் 2வது குற்றப்பத்திரிக்கையில், கனிமொழி, சரத்குமார் ரெட்டியின் பெயர்கள் கூட்டுச் சதியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications