உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட இளைஞர் காங். விருப்பம்
சென்னை: தமிழகத்தில் தடமே தெரியாமல் காங்கிரஸுக்கு மக்கள் சூடு கொடுத்துள்ள நிலையில் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சினை, உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகள், குடும்ப அரசியல் இவைதான் காரணம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவேண்டும். இதை கட்சி மேலிடத்தில் தெரிவிப்போம்.
தமிழக அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யாமல் இந்த ஆண்டு அமல்படுத்தவேண்டும்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், கச்சத் தீவை திரும்ப பெறவும் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம்.
இயக்குநர் சீமான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதுபோல் போலியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் பெண்ணை ஏமாற்றி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் போன்ற மதவாத அமைப்புகள் நாட்டில் மதமோதல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இவர்களுக்கு பாபா ராம்தேவ் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். ஆயுதப்பயிற்சி அளிப்போம் என்று கூறிய அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
பாபா ராம்தேவை கண்டித்து சென்னையில் 15-ந்தேதி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இதில் டெல்லியில் இருந்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு அறிவித்து உள்ளது.
ஊழலுக்கு எதிராக நடுநிலையோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர முதல்வரை ஊழல் காரணமாக பதவியில் இருந்து நீக்கினோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, காமன்வெல்த் முறைகேடு வழக்கு ஆகியவற்றிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications