வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்த சௌதி அரசு முடிவு
ரியாத்: உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்பினை அதிகரிக்கும் வகையில் செளதி அரேபியா அரசு முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு
வெளிநாடுகளில் இருந்து சௌதி அரேபியாவிற்கு தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் சௌதி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான உத்தரவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சௌதியில் வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் திறனைப் பொறுத்து பணி நிர்யணம் செய்யப்படுகிறது. இதற்காக 'நிடாகாட்" என்ற திட்டத்தை வகுத்துள்ளது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் சௌதியில் உள்ள நிறுவனங்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எக்ஸலண்ட், பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் தொழிலாளர் நல அமைச்சகம் விசா மற்றும் பணிக்கான ஆர்டர்களை வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விசா வழங்க கட்டுப்பாடு
எக்ஸலன்ட் மற்றும் பச்சையின் கீழ் வரும் நிறுவனங்கள் சௌதி அல்லாதவர்களுக்கு விசா வழங்க அனுமதித்துள்ளது. மேலும் மஞ்சள் நிறத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் 9 மாதம் விசாவும், சிகப்பு நிறத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் 6 மாத விசாவும் வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு வழங்கலாம் என அனுமதித்துள்ளது. சௌதி அரேபியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவே அந்நாட்டு அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு சௌதி அரேபியாவின் மக்கள் தொகை 27 மில்லியன் ஆக இருந்தது. இதில் 30 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மில்லியன் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு இறுதியில் சௌதி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சௌதி அரசின் புதிய திட்டத்தினால் இந்தியத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications