For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடா நட்புதான் கனிமொழியை சிறைக்கு அனுப்பியது-இளங்கோவன் தாக்கு

Google Oneindia Tamil News

Evks Elangovan
ஈரோடு: கூடா நட்புதான் கனிமொழியை சிறைக்கு அனுப்பியது. எனவே முதலில் தனது மகளுக்கு கருணாநிதி அறிவுரை சொல்லட்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் இளங்கோவன் பேசுகையில்,

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கருணாநிதி.

கூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது. அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன். கூடா நட்புதான் இன்று கருணாநிதி மகள் கனிமொழியை சிறைக்கு அனுப்பியிருக்கிறது. மகளுக்குக் கூற வேண்டிய அறிவுரைகளை எல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லி வருகிறார் கருணாநிதி.

காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு துணை போகாது. கட்சியின் பெரிய தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.

இலவசம், இலவசம் என்று பொருளை வழங்காமல் மக்களுக்கு இலவசமாக கல்வியை மட்டும் கொடுக்க வேண்டும். அப்போது தான் கல்வித்தரம் உயரும், மனித சக்தி உயரும், மக்கள் வாழ்க்கை தரம் உயரும் என்றார் இளங்கோவன்.

English summary
Former Minister EVKS Elangovan has slammed DMK Chief Karunanidhi and his daughter Kanimozhi. He said, Kanimozhi is lodged in jail because of her 'Kooda Natpu'. So Karunanidhi should give advise to his daughter first, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X