பாபுவா நியூகினியாவில் பலத்த நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை இல்லை
சிட்னி: பாபுவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
பாபுவா நியூகினியாவின் நியூ பிரிட்டன் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 6.6 ரிக்டராக பதிவாகியுள்ளது.
கடலுக்கு கீழே 21 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் கழகம் கூறியுள்ளது. அதேசமயம், 37 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆஸ்திரேலியத் தகவல் தெரிவிக்கிறது.
இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை அபாய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
பாபுவா நியூகினியா தாது வளம் நிறைந்த ஒரு குட்டி நாடு. இருப்பினும் இங்கு வறுமை கொடி கட்டிப் பறப்பது குறிப்பிடத்தக்கது. பூகம்பம் அதிகம் தாக்கும் பசிபிக் அக்னி வளையத்தின் கீழ் இந்த குட்டி நாடும் வருகிறது.
1997ம் ஆண்டு இங்கு தாக்கிய கடும் நிலநடுக்கத்திற்கு 3500 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications