2ஜி ஊழலில் நான் லாபமடைந்ததாக கூறப்படும் புகார் அவதூறானது-ப.சிதம்பரம்

நீரா ராடியா மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ராமச்சந்திரன் ராஜா மற்றும் ராடியா ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்கள் மூலம் சிதம்பரத்திற்கும் 2ஜி ஊழலில் பங்கு உள்ளது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான உரையாடலை சில மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.
இதையடுத்து ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். அதில்,
இந்த் தகவல் முற்றிலும் தவறானது, அவதூறானது, பொய்யானது. எனக்கு எதிராக வேண்டும் என்றே விஷமத்தனமாக இந்த கிசுகிசுப்பை பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக ராமச்சந்திரன் ராஜாவும், நீரா ராடியாவும் பேசிக் கொண்டதாக கூறப்படுவது அவதூறானது.
ராமச்சந்திரன் ராஜா மற்றும் நீரா ராடியா தொலைபேசிப் பேச்சு தொடர்பான உரையாடலை சில மீடியாக்கள் வெளியிட்டுள்ளன. இதற்கான பதிவு இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் எனக்கும் இந்த விவகாரத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
மன்னிப்பு கேட்டது ரிலையன்ஸ்
இதற்கிடையே தனது நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வேண்டும் என்றே ப.சிதம்பரம் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த ஊழியருக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ப.சிதம்பரம். அதற்குப் பதிலளித்துள்ள ரிலையன்ஸ் குழும தலைவர் வி.பாலசுப்ரமணியம் கூறுகையில், எங்களது நிறுவனத்தைச் சேர்ந்த கே.ராமச்சந்திரன் ராஜா என்பவர் உங்களைப் பற்றி நீரா ராடியாவுடன் தொலைபேசி உரையாடலின்போது குறிப்பிட்டவை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் குறிப்பிட்டவையாகும்.
அது நியாயமற்றது, தவறானது, தேவையற்றது, அவதூறானதாகும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications