ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீது திமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை ஜூன் 18ம் தேதிக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜெயலலிதா தவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை பெங்களூர் தனி கோர்ட் விசாரித்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் கந்தசாமி ஆஜரானார். அப்போது தமிழக காவல்துறை அதிகாரி சம்பந்தம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இதுதொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, வழக்கை ஜூன் 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications