முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு ஆர்வம்
டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் கூறுகையில்,
இலங்கைத் தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.
தமிழக முதல்வர், தமிழக மக்கள் ஆகியோருடன் உள்ள நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் விதத்தில் நல்ல உறவை வைத்துக் கொள்ள இலங்கை அரசு ஆர்வத்துடன் இருக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் சந்தித்தபோது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தெரிவித்த கவலைகளை நீக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மிக நெருக்கமானது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண வரும் காலங்களில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்படுவோம்.
கச்சத்தீவு பிரச்னை இரு நாடுகளுக்கும் இடையில் இறுதி செய்யப்பட்ட பிரச்னை ஆகும். இறுதி செய்யப்பட்டுவிட்ட இப் பிரச்னை குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications