முன்னாள் அமைச்சர் வில்வநாதன் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் - ஜெயலலிதா
வேலூர்: வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் இரா. வில்வநாதனை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள கே. சிவசங்கரன், வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் உள்ள வி. அருணாபதி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் பதவியில் இருக்கும் இரா. வில்வநாதன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இரா.வில்வநாதன் (முன்னாள் அமைச்சர்), வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக கே.சிவசங்கரன், (காந்திநகர், காட்பாடி), வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். அணிச்செயலாளராக சி.ஏழுமலை (சுமைதாங்கி ஊராட்சி மன்றத் தலைவர்), சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக சி.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications