சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் திடீர் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த அர்ச்சனா ராமசுந்தரம், போலீஸ் பயிற்சிப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
அவரது இடத்தில் கூடுதல் டிஜிபி சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி அருகே அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் பலியான விவகாரத்தில் படு தீவிரமாக துப்பு துலக்கியது சிபிசிஐடி. அர்ச்சனா ராமசுந்தரம் பெரம்பலூரிலும், திருச்சியிலும் முகாமிட்டு இந்த வழக்கை முடுக்கி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் துணை ஆணையராக அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் ஏற்கனவே இருந்து வந்த திருநாவுக்கரசு அதிமுகவினரைக் கைது செய்த சர்ச்சையில் சிக்கியதால் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் போலீஸ் கமிஷனராக சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐஜியாக சுனில் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை துணை ஆணையராக ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் முக்கியப் பதவியில் சேகர்
சிபிசிஐடி கூடுதல்டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.சேகர் 2008ம் ஆண்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவி வகித்து வந்தார். அப்போது சட்டக் கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வன்முறையை காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்ததால் அவரது பதவி பறி போனது. இந்த நிலையில் மீண்டும் சேகர் சென்னையில் முக்கியப் பதவிக்கு வந்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications