நோக்கியா உதிரிபாக குடோனில் பெரும் தீ: மூவர் படுகாயம்!

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நோக்கியா செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவன வளாகத்தில் பெர்லாக்ஸ் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் உள்ளது. இதன் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு குடோன் முழுவதும் பரவியது.
இதில் குடோனில் இருந்த சுமார் 37 ஆயிரம் லிட்டர் பெயிண்ட், தின்னர், அட்டைபெட்டிகள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் உள்பட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின.
3 பேர் படுகாயம்
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம், திருப்பெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை, பேரம்பாக்கம், மறைமலைநகர் போன்ற பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்த தீவிபத்தில் மணி (வயது 28) என்பவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications