கோர்ட் நேரத்தை வீணடித்ததாக டிராபிக் ராமசாமிக்கு ரூ. 10,000 அபராதம்

சென்னையைச் சேர்ந்தவர் ராமசாமி எனப்படும் டிராபிக் ராமசாமி. பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு வழக்குகளைத் தொடர்நது அதில் பலவற்றில் வெற்றியும் பெற்றவர்.வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடுவார்.
இந்த நிலையில் இவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் சட்ட மசோதா வரவு கமிட்டியில் தென் மாநிலத்திற்கு பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு மனு கொடுத்திருந்தேன்.
அம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ராமசாமி மத்திய அரசுக்கு மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இம்மனுவை அவரது தனிச் செயலாளர் தான் கொடுத்துள்ளார். எனவே டிராபிக் ராமசாமி கோர்ட்டுக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார்.
பொது நல வழக்கு என்ற பெயரில் இது போன்ற வழக்கை தாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடித்துள்ளார்.
இருப்பினும் டிராபிக் ராமசாமியின் வயது கருதி அவருக்கு இந்த கோர்ட் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறது. அவர் இதை 3 வாரத்தில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைய குழுவிடம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications