தமிழ் தேசிய கூட்டமைப்புக் கூட்டத்தில் புகுந்து இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில்நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டத்தில் புகுந்த சிங்கள ராணுவத்தினர், அதன் தலைவர்களைத் தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று மாலை அளவெட்டி என்ற இடத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கூட்டமைப்பின் தலைவர்கள் மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுரேஷ் பிரமேச்சந்திரன், ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு புகுந்த ராணுவத்தினர் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். கூடியிருந்தவர்களை சரமாரியாக அடித்து விரட்டினர். மேலும் தலைவர்களையும் அவர்கள் தாக்க முயன்றனர். இதை அவர்களது பாதுகாவலர்கள் தடுத்தபோது அவர்களுக்கும் அடி விழுந்தது.

சுதர்சன் என்பவரை ராணுவத்தினர் கடுமையாகத் தாக்கியதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாகனத்தை ராணுவத்தினர் தாக்கியதில் அது முழுமையாக சேதமடைந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தால் தமிழர் பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+