இந்தாண்டு 3 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

Subscribe to Oneindia Tamil

Sriharikotta
மகேந்திரகிரி: இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்த ஆண்டு 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள திரவ இயக்க அமைப்பு மையத்தின் சார்பில் ராக்கெட் தொழில்நுட்பத்தி்ன் எல்லைகளின் விரிவாக்கம் தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேறறி துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

கடந்த ஆண்டு ரஷ்யாவில் தயாரான கிரையோஜெனிக் என்ஜின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பல்வேறு கட்ட சோதனைகள் முடித்து ஜிஎஸ்எலவி டி5 2012ம் ஆண்டு மத்தியில் விண்ணில் செலுத்தப்படும். இது ஜிசாட் 14 என்ற செயற்கைக் கோளை சுமந்து செல்லும்.

ஜிசாட் 8 செயற்கை கோள் கடந்த மே 21ம்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் சரியான பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இறுதிக் கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த மாதத்திற்குள் இந்த செயற்கைகோள் செயல்பட தொடங்கும்.

பிஎஸ்எல்வி சி 17 ராக்கெட் ஜூலை 2வது வாரத்தில் ஜிசாட் 12 என்ற செயற்கைகோளை வி்ண்ணில் செலுத்தும்.

பிஎஸ்எல்வி சி 18 ராக்கெட் மூலம் மெகா டிராபிக் செயற்கை கோளை விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாராக உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத் தளத்தில் இருந்து இந்த செயற்கை கோள் ஏவப்படும். இந்த மெகா டிராபிக் செயற்கைகோள் இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் கூட்டு முயற்சியாகும்.

அதே போல மேக கூட்டங்களை மிக துல்லியமாக படம் பிடிக்கும் ஆர்1சாட் என்ற செயற்கை கோள் டிசம்பர் மாதம் விண்ணி்ல் செலுத்தப்படும்.

ஜிஎஸ்எல்வி மார்க் 3-எஸ் 200 ராக்கெட்டில் திட எரிபொருள் என்ஜின் பொருத்தப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோதனை நடத்தப்பட்டது. இதன் அடுத்த கட்ட சோதனை அடுத்த மாதம் நடத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+