கூடுதல் கட்டண வசூலைக் கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர்கள் உண்ணாவிரதம்
சென்னை: சென்னையில் அரசின் கட்டண நிர்ணயத்தைக் கடைப்பிடிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி தனியார் பள்ளியின் முன்பு பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் கல்கி ரங்கநாதன் மான்ட்போர்ட் என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த ஆண்டு முதல் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்தப் பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து பெற்றோர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு, நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி விதித்த கட்டணத்தை வசூலிக்காமல் அதிக அளவிலான கட்டணத்தை வசூலித்து வருவதாக பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் குற்றம் சாட்டி போராட்டங்களில் குதித்துள்ளனர்.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளி முன்பு பெற்றோர்கள் திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications