முல்லைப் பெரியாறு: உம்மன் சாண்டி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறி்த்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
தமிழக-கேரள எல்லையையொட்டி இடுக்கி மாவட்டத்தில், தேக்கடி அருகே முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இங்கிருந்து, தமிழகத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்பட 7 விவசாயத்திற்கு நீர் கிடைக்கிறது. மேலும், மின் உற்பத்திக்கும் நீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கேரள அரசு அணையின் உறுதி குறைந்துள்ளதாகக் கூறி புதிய அணை கட்டத் திட்டமிட்டது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது கேரள முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உம்மன் சாண்டி தலைமையில் இன்று மாலை திருவனந்தபுரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிபுணர் குழு தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்று கேரள அரசு சந்தேகிக்கிறது. இது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
நிபுணர்கள் குழு தங்கள் அறிக்கையை சமர்பிக்கும் முன்பே அணையில் உள்ள விரிசல்களை எபோக்சி என்ற ரசாயனம் கொண்டு அடைத்துவிடலாம் என்று தெரிவித்தது. இதனால் தான் கேரள அரசு நிபுணர் குழுவை சந்தேகிக்கிறது. இது தவிர கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அணையை ஆய்வு செய்த மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள், அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்ப்பித்தனர்.
அந்த குழுவில் இருந்தவர்கள் தான் தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவிலும் இருப்பதால் மீண்டும் அணை உறுதியாகத் தான் இருக்கிறது என்று கேரள அரசுக்கு எதிராக அறிக்கை சமர்பித்துவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. அவ்வாறு சமர்பித்தால் என்ன செய்வது என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications