ஆப்கான் எல்லையில் பாக். போர் விமானங்கள் குண்டுவீச்சு-25 தீவிரவாதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்: தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா நெருக்கி வரும் நிலையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடத்திய தாக்குதலில் 25 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மொக்மன்ட் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து தீவிரவாதிகள் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வாலிடாட் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவ சோதனை சாவடி மீது 50 தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் விமான படை போர் விமானங்கள் ஆகியவை இணைந்து தாக்குதல் நடத்தினர்.
போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications