இந்திய தொலை தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 12% அதிகரிப்பு
மும்பை: இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களின் வருவாய் 2010-11ம் நிதியாண்டில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1,19,845 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தவிர்த்து அனைத்து தனியார் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களின் வருவாயும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. ஆனால், ஏர்செல், டாடா டெலிசர்வீசஸ், ஐடியா செல்லுலார், வோடாபோன் எஸ்ஸார் ஆகியவற்றின் வருவாய் பெருமளவில் அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 7.2 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.37,534 கோடியாக அதிகரித்துள்ளது. சென்ற மே மாதம் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 16.71 கோடியைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஏர்செல் நிறுவனத்தின் வருவாய் 36 சதவீதம் அதிகரித்து ரூ.5,620 கோடியாக உயர்ந்துள்ளது. வோடாபோன் நிறுவனத்தின் வருவாய் 15 சதவீதம் வளர்ந்துள்ளது.
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் வருவாய் 22.2 சதவீதம் அதிகரித்து ரூ.10,006 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வருவாய் 19.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
செல்போன் சேவையில் ஒரே எண் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்நிறுவனத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9.38 கோடியாக உயர்ந்துள்ளது.
செல்போன்கள் விற்பனையில் பின்லாந்தை சேர்ந்த நோக்கியா நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. இதையடுத்த நிலையில் கொரியாவின் எல்.ஜி. மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
2010ம் ஆண்டில் இந்தியாவில் 17 கோடி செல்போன்கள் விற்பனையாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications