திஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டார் கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 20ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மகளிர் சிறையான சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனுக்களை சிபிஐ கோர்ட், டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்து விட்டன. சிபிஐ கனிமொழி மீதான குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்த பின்னர் சிபிஐ கோர்ட்டை அணுகி ஜாமீன் பெற முயற்சிக்கலாம் என கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கே இன்னும் 45 நாட்களாகலாம் என்று தெரிகிறது.
எனவே அவர் அதுவரை சிறையில்தான் இருந்தாக வேண்டிய நிலை. இந்த நிலையில் முன்பு வேறு சில பெண் கைதிகளோடு சேர்த்து அடைக்கப்பட்டிருந்த கனிமொழி தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திஹார் சிறை இயக்குநர் ஜெனரல் நீரஜ் குமார் கூறுகையில், சக கைதிகளிடையே அவ்வப்போது நடைபெறும் சண்டைகளில் கனிமொழி சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கனிமொழியை தனி அறைக்கு மாற்றியுள்ளோம்.
கனிமொழி சிறை விதிகளை முழுமையாகவும், கண்டிப்போடும் கடைப்பிடிக்கிறார் என்றார் அவர்.
கனிமொழியை நேற்று அவரது தந்தை கருணாநிதி, தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications