கண்ணில் மிளகாய் பொடி தூவி பஞ். தலைவருக்கு அரிவாள் வெட்டு
விருதுநகர்: ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் அரிவாளால் சாரமரியாக வெட்டியதில் பஞ்சாயத்து தலைவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் விருதுநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அனந்தராமன். விருதுநகர் சாலையில் உள்ள அக்கரைப்பட்டி விலக்கு அருகே அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குஅனந்தராமன் நேற்றிரவு 11 மணிக்கு வந்தார்.
அப்போது இரு பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த நான்கு மர்ம நபர்கள் அனந்தராமனை வழிமறித்து அவர் கண்களில் மிளகாய் பொடி தூவினர். இதனால் நிலைகுலைந்த அவரை அரிவாளால் சராமரியாக வெட்டினர். இதில் அனந்தராமனின் இடது கை, வலது கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.
சராமரியாக வெட்டியதும் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் இருந்த அனந்தராமன் விருதுநகர் அரசு மருத்துமனையில் முதலுதவிக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் வச்சகராப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கும் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications